தமிழ்நாடு உருவான வரலாற்று சிறப்புமிக்க நாளான நவம்பர் 1-ஆம் நாள் சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் தமிழ்நாடு நாள் விழா கொண்டாட்டங்கள் நடைபெற்றன.
விழாவில் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், தலைமைச் செயலகத்தில் தமிழ்ச்சங்கம் அமைக்கப்படும் என்றும், முதல்வரே அதன் தலைவராக இருப்பார் என்றும் தெரிவித்தார்.
அரசு அலுவலகங்களில் மரபாடை தினம் கொண்டு வரப்படும் என்றும், உலகத் தமிழ் மாநாடு மீண்டும் உலகெங்கும் நடத்தப்படும் என்றும் அவர் அறிவித்தார்.