
அமெரிக்காவில் நிரந்தரமாகக் குடியேற 75 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அதிபர் டிரம்ப் விதித்த விசா தடை செல்லாது என நியூயார்க் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக், நைஜீரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா மறுத்த டிரம்ப் அரசின் கொள்கை சட்டத்திற்கு முரணானது என நீதிபதி ஜேனட் வர்காஸ் தீர்ப்பளித்துள்ளார்.
இந்தத் தீர்ப்பின் மூலம், குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்தவர் என்ற காரணத்திற்காக இதுவரை நிராகரிக்கப்பட்ட அனைத்து விசா விண்ணப்பங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.