
சீனாவின் ஹங்சோ நகரில் நடைபெறும் ஐஎஸ்எஸ்எப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் சோனம் உத்தம் மஸ்கர் மற்றும் ஹிமான்ஷு தில்லான் ஜோடி வெண்கலப் பதக்கம் வென்றது.
10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணிகள் பிரிவில் பங்கேற்ற இந்திய ஜோடி 441.2 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
இப்போட்டியில் சீன ஜோடிகள் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்ற நிலையில், பாரா குண்டு எறிதலில் ஷர்மிளா தன்கர் தங்கமும், உயரம் தாண்டுதலில் சர்வேஷ் குஷாரே வெள்ளியும் வென்றனர்.