/nakkheeran/media/media_files/2026/10/31/edaptrichy-2026-10-31-07-43-17.jpg)
தவெக ஆட்சி பொறுப்பேற்று 6 மாதங்கள் ஆன நிலையில் விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டதாகவும், அதை கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டதாகவும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த 6 மாத காலத்தில் அரசு 40,000 கோடி ரூபாய் கடன் வாங்கியிருப்பதாகவும், சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பப் பெற்றோர்கள் பயப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
தவெகவின் 5 மாத ஆட்சிக்கு மதிப்பெண் என்ன என்ற கேள்விக்கு செய்தியாளர்களிடம் அவர் 'மைனஸ் பூஜ்ஜியம்' என்று பதிலளித்தார்.