
2021-ல் 900 ஊழியர்களை ஜூம் மீட்டிங் மூலம் பணிநீக்கம் செய்து சர்ச்சையில் சிக்கிய Better Home & Finance நிறுவனத்தின் சிஇஓ விஷால் கார்க் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
விஷால் கார்க் தலைமையின் கீழ் நிறுவனத்தின் பங்குகள் 90 சதவீதத்திற்கும் மேல் சரிந்துள்ளதோடு, 2022-க்குப் பிறகு நிறுவனம் 1.5 பில்லியன் டாலருக்கும் அதிகமான இழப்பைச் சந்தித்துள்ளது.
நிறுவனத்தின் வருடாந்திர விற்பனை 2021-ல் 1.5 பில்லியன் டாலராக இருந்த நிலையில், 2023-ல் 70 மில்லியன் டாலராகச் சரிந்து, தற்போதைய சந்தை மதிப்பு 300 மில்லியன் டாலராக உள்ளது.