
அவுஸ்திரேலியாவில் சுற்றுலா பயணிகளிடையே டெங்கு நோய் பரவி வரும் நிலையில், நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக டெங்கு தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய நோய்த்தடுப்பு ஆலோசனைக் குழுவின் புதிய வழிகாட்டுதல்களின்படி மருத்துவர்கள் இந்த தடுப்பூசியை பரிந்துரைத்து வழங்க முடியும்.
இந்தோனேசியா, தாய்லாந்து, இந்தியா உள்ளிட்ட டெங்கு அபாயம் அதிகமுள்ள நாடுகளுக்குப் பயணம் செய்பவர்கள் மருத்துவ ஆலோசனையின் அடிப்படையில் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளலாம்.