
தனுஷ் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஓம்: சாப்டர் 1' படத்தின் 'அலாக்கா லோவா' என்ற முதல் பாடல் இன்று இரவு 7 மணிக்கு வெளியானது.
ஒண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆர் டேக் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் மம்முட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா மற்றும் இந்திரன்ஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகியுள்ள இந்தப் பாடலுக்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ள நிலையில், தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு இது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.