
பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் ஆகஸ்ட் 14 முதல் 30 வரை நடைபெறவுள்ள 16-வது உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய பெண்கள் அணி முதல் பதக்கத்தை வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக கோல்கீப்பர் சவிதா புனியா தெரிவித்துள்ளார்.
இத்தொடரின் 'டி' பிரிவில் இங்கிலாந்து, சீனா மற்றும் தென் ஆப்ரிக்காவுடன் இடம்பெற்றுள்ள இந்திய பெண்கள் அணி, தனது முதல் போட்டியில் ஆகஸ்ட் 16 அன்று சீனாவை எதிர்கொள்கிறது.
ஆண்கள் பிரிவில் இந்தியா 1975-ல் ஒருமுறை சாம்பியன் ஆகியுள்ள நிலையில், பெண்கள் பிரிவில் நெதர்லாந்து அணி அதிகபட்சமாக 9 முறை உலகக் கோப்பையை வென்று முதலிடத்தில் உள்ளது.