
ஜப்பானில் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4 வரை நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய ஆண்கள் ஆக்கி அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹர்மன்பிரீத் சிங் கேப்டனாகத் தொடரும் இந்த அணியில், ஆதித்யா அர்ஜூனுக்குப் பதிலாக ராஜ்குமார் பால் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தத் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணி 2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெறும் என்று பயிற்சியாளர் கிரேக் புல்டான் தெரிவித்துள்ளார்.