
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரோகித் சர்மா தனது 63வது அரைசதத்தை நிறைவு செய்தார்.
இந்திய அணி 4 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது, சீனியர் வீரரான ரோகித் சர்மா 58 பந்துகளில் அரைசதத்தை எட்டினார்.
சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 92 ரன்கள் எடுத்திருந்தபோது கீமோ பால் பந்தில் சிக்சர் அடிக்க முயன்று விக்கெட்டை இழந்தார்.