
கடந்த 2023 அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் தாக்குதலில் தனது காதலி லிரோன் பர்டாவை இழந்த பார் அஸ்ரப், அவரது கல்லறை முன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இசைநிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது ஹமாஸ் ஆயுதக்குழு நடத்திய தாக்குதலில் 370 பேர் கொல்லப்பட்டனர், அதில் லிரோன் பர்டாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக மிகுந்த மன உளைச்சலில் இருந்த பார் அஸ்ரப்பின் உடலை மீட்ட போலீசார், இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.