
பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சிறப்பு மையத்தின் தலைவராக உள்ள விவிஎஸ் லக்ஷ்மண், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு கிரிக்கெட் இயக்குநராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது.
இந்த புதிய பதவியின் கீழ், அவர் வீரர்களின் உடல் மீட்புப் பயிற்சி மற்றும் ஸ்டாஃப் நியமனம் போன்ற பணிகளைத் தொடர்ந்து மேற்பார்வையிடுவார்.
தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் மற்றும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஆகியோரின் பதவிக்காலம் குறித்த விவாதங்கள் நிலவும் சூழலில் இந்த மாற்றம் முக்கியத்துவம் பெறுகிறது.