
பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் நகரில் நடைபெற்ற டயமண்ட் லீக் ஈட்டி எறிதல் போட்டியில், 23 வயதான இலங்கை வீரர் ருமேஷ் தரங்கா 89.04 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார்.
இந்த வெற்றியின் மூலம் டயமண்ட் லீக் தடகளப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இலங்கை வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்துள்ளார்.
இப்போட்டியில் போலந்து வீரர் டேவிட் வெகனர் 87.47 மீட்டர் தூரத்துடன் இரண்டாவது இடத்தையும், கேஷர்ன் வால்காட் 83.99 மீட்டர் தூரத்துடன் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.