
தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் வட கடலோர மாவட்டங்களில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.
வட உள் தமிழகத்தில் வரும் 13ஆம் தேதி வரை பகல் நேர வெப்பநிலை இயல்பை விட சுமார் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.