
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான எஸ். மேகனா, அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் தனது 30-வது வயதில் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்திய அணிக்காக 3 ஒருநாள் மற்றும் 17 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 2022-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற அணியில் இடம்பெற்றிருந்தார்.
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் கோப்பையை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிலும் இடம்பெற்றிருந்த அவர், அடுத்த தலைமுறை வீராங்கனைகளுக்கு வழிகாட்ட விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.