
சென்னை வேளச்சேரி ஃபீனிக்ஸ் மாலில் ஆகஸ்ட் 8-ம் தேதி இரவு நடைபெறவிருந்த 'மீசைய முறுக்கு 2' திரைப்பட விளம்பர நிகழ்ச்சி கூட்ட நெரிசல் காரணமாக ரத்து செய்யப்பட்டது.
ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டதால் பாதுகாப்பு கருதி காவல்துறையின் அறிவுறுத்தலின் பேரில் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக மால் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
ரசிகர்களைச் சந்திக்க முடியாமல் போனதற்கு வருத்தம் தெரிவித்துள்ள நடிகர் ஹிப்ஹாப் ஆதி, ரசிகர்களின் பாதுகாப்பு முக்கியம் என வீடியோ மூலம் மன்னிப்பு கோரியுள்ளார்.