
தி.மு.க.வில் முக்கியப் பொறுப்புகள் கிடைக்காததால் அதிருப்தியில் உள்ள ஓ.பன்னீர்செல்வம், தனது மகன் ரவீந்திரநாத்தின் ஆலோசனையின் பேரில் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைய முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தென்மாவட்டங்களில் கட்சியை வலுப்படுத்த ஓ.பன்னீர்செல்வத்தை இணைக்க தவெக தலைமை சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு இணைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
2029 நாடாளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதியில் ரவீந்திரநாத் தவெக சார்பில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாகவும், தேர்தலுக்குப் பிறகு தி.மு.க.விலிருந்து விலகி தவெகவில் இணையும் முதல் நபர் ஓபிஎஸ் ஆக இருப்பார் என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.