
நேட்டோ மாநாட்டிற்காக துருக்கி சென்ற டிரம்ப், அங்கிருந்து பிரிட்டன் செல்லும்போது ஈரான் அச்சுறுத்தல் காரணமாக ரகசியமாக ராணுவ விமானத்தில் பயணித்துள்ளார்.
Air Force One விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தக்கூடும் என உளவுத்துறை எச்சரித்ததால், டிரம்ப் பாதுகாப்பாக மற்றொரு விமானத்திற்கு மாற்றப்பட்டதாக வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.
கேமராக்கள் முன்னிலையில் Air Force One விமானத்தில் ஏறிய டிரம்ப், பின்னர் கேட்டரிங் லாரி மூலம் ரகசியமாக ராணுவ விமானத்திற்கு மாற்றப்பட்டதை பெரும்பாலான அதிகாரிகள் அறியவில்லை.