
திருவான்மியூர் ரயில் நிலையம் அருகே மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணி நடக்கும் இடத்தில் திடீரென சாலை உள்வாங்கி 10 அடி ஆழத்திற்கு ராட்சத பள்ளம் ஏற்பட்டது.
அதில் ஐ.டி. ஊழியர் வீணா மற்றும் ஓட்டுநர் பிரவீன் சென்ற ஹூண்டாய் கார் தலைகீழாகக் கவிழ்ந்த நிலையில், பின்னால் வந்தவர்கள் அவர்களை மீட்டனர்.
இந்த விபத்தினால் மத்திய கைலாஷ் சந்திப்பில் இருந்து ஓ.எம்.ஆர். மற்றும் இ.சி.ஆர். நோக்கிச் செல்லும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு மூன்று மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.