
மாருதி சுஸுகி நிறுவனம் ரூ.8.50 லட்சம் முதல் ரூ.10.50 லட்சம் வரையிலான விலையில் புதிய சிறிய எலக்ட்ரிக் காரை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இந்த கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் 250 முதல் 315 கி.மீ வரை ரேஞ்ச் வழங்கும் வகையில் 26 kWh பேட்டரியுடன் வடிவமைக்கப்பட்டு வருகிறது.
டாடா டியாகோ இவி மற்றும் எம்.ஜி. கோமெட் இவி கார்களுக்குப் போட்டியாக வரவுள்ள இந்த கார், மாருதியின் அரினா ஷோரூம்கள் மூலம் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.