
இலங்கையின் கல்குடா பகுதியில் சார்ஜ் செய்தவாறு மார்பில் வைத்து உறங்கிய கையடக்க தொலைபேசி வெடித்ததில் 19 வயதுடைய கமலேஸ்வரன் சங்கீதன் என்ற இளைஞன் உயிரிழந்தார்.
நேற்று வியாழக்கிழமை மாலை 6.00 மணிக்கு இந்த சம்பவம் நிகழ்ந்ததாக பாசிக்குடா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர், இளைஞனின் உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
தொலைபேசி சூடாகி வெடித்ததால் படுகாயமடைந்த இளைஞனை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.