நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில், இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் வெளியான 'பத்தா' திரைப்படக் குழுவினரை நடிகர் கமல்ஹாசன் இன்று நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
அட்லீ தயாரிப்பில் சாய் அபயங்கர் இசையில் உருவான இந்தப் படத்தில், குழந்தை நட்சத்திரம் சாய் பிருத்விராஜின் நடிப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ரசிகர்களின் வரவேற்பால் கூடுதல் திரைகள் ஒதுக்கப்பட்ட நிலையில், படத்தின் வெற்றிக்குக் காரணமாக இருந்த விஜய் சேதுபதி, அட்லீ உள்ளிட்டோரை கமல்ஹாசன் நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.