
கொழும்பில் இன்று தொடங்கிய இந்தியா-இலங்கை இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு, சரண்ஷ் ஜெயின் அறிமுக வீரராகக் களமிறக்கப்பட்டுள்ளார்.
டாஸ் வென்ற இந்திய கேப்டன் சுப்மன் கில், ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்பதால் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளார்.
இலங்கை அணியில் காயமடைந்த தினேஷ் சண்டிமாலுக்குப் பதிலாக கமில் மிஷாரா அறிமுக வீரராகவும், பசிந்து சூரியபண்டார பிளேயிங் லெவனிலும் சேர்க்கப்பட்டுள்ளனர்.