
தற்போதைய தலைமைச் செயலகத்தில் உள்ள இடவசதி குறைபாடுகளைக் கருத்தில் கொண்டு, புதிய செயலகத்தை அமைக்க த.வெ.க. அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
கோயம்பேடு, கிண்டி நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி வளாகம் மற்றும் பட்டினப்பாக்கம் ஆகிய 3 இடங்கள் புதிய செயலகத்திற்காக பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
பட்டினப்பாக்கத்தில் 24 ஏக்கர் பரப்பளவில் புதிய கட்டிடம் அமைக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், சட்டமன்றத்தில் இது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.