Indian Politics
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: தொழிலதிபரை மிரட்டிய காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: தொழிலதிபரை மிரட்டிய காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்

polimernews2h
THE BRIEF
1

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் நபருக்கு சிம்கார்டு வாங்கி கொடுத்ததாக மிரட்டி 40 லட்சம் ரூபாய் லஞ்சம் பறித்த காவல் ஆய்வாளர் முகம்மது புஹாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

2

தொழிலதிபர் அகிலகுமாரை போதைப்பொருள் வழக்கில் கைது செய்வதாக மிரட்டி, வண்ணாரப்பேட்டை தலைமைக்காவலர் சீனிவாசன் உதவியுடன் ஆய்வாளர் புஹாரி பணம் பறித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

3

இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் இரு காவலர்கள் கைது செய்யப்பட வாய்ப்புள்ள நிலையில், கொலை வழக்கின் விசாரணை அதிகாரிகள் அனைவரிடமும் விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.