
பிரித்தானியாவின் தேசியப் பாதுகாப்பிற்கு ரஷ்யா, ஈரான் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் ஆகியவற்றால் ஆபத்துக்கள் அதிகரித்து வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவால் எழும் அபாயங்களைக் கண்காணிக்க MI5 புதிதாக 'AI அச்சுறுத்தல் மதிப்பீட்டு மையம்' (AITAC) அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதிகள் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உயிரி-ஆயுதங்களை உருவாக்கவும் மற்றும் துல்லியமான ட்ரோன் தாக்குதல்களை நடத்தவும் முற்பட்டு வருவதாக உளவு அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.